கடவுசீட்டு பெற நீண்ட வரிசையில்லை


புதிதாக அறிமுகப்படுத்த இணையம் ஊடாக கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் முறைமூலம் நாடு முழுவதும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் இருந்து மொத்தம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குச் செல்லாமல் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வகையில், இணையம் ஊடாக கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் முறை கடத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 5,294 பேர் ஒரு நாள் சேவையையும், 24,285 பேர் சாதாரண சேவையையும் தெரிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் முன்னர் காணப்பட்ட நீண்ட வரிசைகளை இந்த முறை காரணமாக நீங்கியுள்ளது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

No comments