கிரீமியப் பாலம் மீது உக்ரைன் தாக்குதல்: சரிந்தது பாலம்!


கிரிமியாப் பாலம் மீது உக்ரைன் தாக்குதலை நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் மகள் காயமடைந்தார். 

இந்நிலையில் அப்பகுதியில் அவகரகாலப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதாக ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு கிரிமியாப் பாலம் ஊடாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இராணுவத்திற்கான இராணுவ தளபாடங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் மிக முக்கிய பாதையாக கிரிமியாப் பாலம் செயற்படுகிறது.

பாலத்தின் மீதான தாக்குதலில் பாலத்தின் ஒரு பகுதி சாய்ந்து தொங்குவதைக் காட்டியது. தாக்குதலில் பாலத்தின் தூண்கள் பாதிக்கவில்லை. சாலையின் இணைப்புப் துண்டுகளில் ஒரு பகுதி தேசமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 6 மணி நேரம் நிறுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் இன்று திங்கள்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.

உக்ரைனில் உள்ள கேர்ச் பாலத்திலிருந்து இரண்டு உக்ரைனிய கடல் ரோன்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யத் தரப்பினர் தெரிவித்தனர். அத்துடன் இத்தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் உள்ளதாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

கிரிமியா தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்புகளின் உயர்மட்ட தலைமையை ரஷ்யா அழிக்க வேண்டும் என்று ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் கூறினார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ள நிலையில், உக்ரைன் பாதுகாப்பு சேவைகள் நீருக்கடியில் ஆளில்லா விமானங்கள் மூலம் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் நீரடி கமிக்காஸ் கடல் டிரோன் (600 கி.மீ கடலில் பயணம் செய்கிறது)  

No comments