யாழ். அரியாலையில் வெடிமருந்து மீட்பு


யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. 

மண்டைதீவு கடற்படையினருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இவை சட்ட விரோத மீன்பிடிக்கு கடற்தொழிலாளர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 

No comments