நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்


சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துகளின் தரம் மற்றும் கொள்வனவு செயற்பாட்டில் உள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சுகாதாரத் துறைக்குள் அவசர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சாகல ரத்நாயக்க, நெருக்கடிகள் தொடர்பான ஊடக அறிக்கைகளின் உண்மையை ஆராயுமாறும் அறிவுறுத்தினார்.

இந்த குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை என கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ உடனடியாக தலையிட்டு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் அலட்சியப்போக்கு நோயாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதனை மன்னிக்க முடியாது என்றும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

No comments