டென்மார்க்கில் நடைபெற்ற பொதுத்தேர்வு 2023

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும்

நடாத்தப்பட்டது.

இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர்.

நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போக் என்னும் நகரத்தில் மாலதி தமிழ்க் கலைக்கூடம் புதிதாகத் தொடக்கப்பட்டது. இக்கலைக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்களும் இம்முறை ஆண்டிறுதித் தேர்விலும் புலன்மொழி வளத்தேர்விலும் மகிழ்வுடன் பங்குபற்றினார்கள்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு" எனும் வள்ளுவரின் கூற்றிற்கு அமைய, பங்கு பற்றிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் மாலதி தமிழ்க் கலைக்கூடம் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளை எழுத்துத் தேர்வை சிறப்பாக நடாத்துவதற்கு மேற்பார்வையாளராக கடமையாற்றியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

No comments