காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்:ஏற்கமாட்டோம்!



காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், தாம் ஒருபோதும் அதில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேசத்தின் தலையீடின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைப்பொறிமுறையையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை.

தமது சங்கத்தைச் சேர்ந்த 75 சதவீதமானோர் இந்த அலுவலகத்திடம் முறைப்பாட்டை வழங்கவில்லை.

மேலும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வறுமையில் உள்ள தாய்மார்களை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசதரப்புக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.


ஆகவே வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த தேவையான உதவிகளை, சர்வதேச நாடுகளும், மனித உரிமைகள் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் வழங்க முன்வரவேண்டும்.”என்றும் தெரிவித்துள்ளார்   

No comments