அதிகரிக்கும் பொருளாதார தற்கொலைகள்!



இலங்கையின் வடபுலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமான தற்கொலை முயற்சிகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்து செல்கின்றது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு முன்னர் கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட இளைஞன் இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளான்.

இலங்கை அரசின் புதிய அரச பணிகளிற்கான ஆட்சேர்ப்பு கடந்த இரண்டுவருடங்களாக கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மில்லியன் கணக்கான இளம் சமூகத்தினர் இலங்கையில் பொருத்தமான தொழில் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

No comments