பிரான்சில் கலவரங்களை தடுக்க 40 ஆயிரம் காவல்துறையினர் அணிதிரட்டல்


பிரான்சில் கடந்த செவ்வாயன்று பாரிஸில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பரவிய கலவரங்களைச் சமாளிக்க 40,000 காவல்துறை அதிகாரிகளை அணிதிரட்டுவதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்றிரவு 40,000 போலீசார் அணிதிரட்டப்படுவார்கள் என்று இதில் 5,000 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார்.

நேற்றுப் புதன்கிழமை இரவு கலவரம் பரவிய பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களுக்கும் எஞ்சிய காவல்துறை அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் மேலும் கூறினார்.

No comments