பிரான்சில் இடம்பெற்ற ரணிலின் வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்  இன்று 22.06.2023 வியாழக்கிழமை 14.30 மணிக்கு

ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை Place de la Republique பகுதியில் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறும் தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும் இளையோர்கள் பலரும் முன்னின்று குரல் எழுப்பினர்.

பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரைகளும் இடம்பெற்றன.

நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் எதிர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.

குறித்த போராட்டம் நாளை (23.06.2023) வெள்ளிக்கிழமை பி.ப.14.30 மணிக்கு பாரிஸ் Porte Dauphine பகுதியில் சிறிலங்கா தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது.

No comments