வவுனியாவில் சீன சீனி?

வவுனியா நைனாமடுப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சீனி தொழிற்சாலையுடன் கூடிய உற்பத்திச் செய்கைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி சீனாவின் கையில் கையளிப்பதற்கான வேலைத் திட்டங்களை அரசு ஆரம்பித்துள்ளது.

அதற்கான மெய்நிகர் வழியான கூட்டம் ஒன்றை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மே 19 ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்கள், வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிக்குளம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை (கிழக்கு) மற்றும் மாந்தை ஆகிய பிரதேச செயலாளர்களுடன் அந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

வவுனியா நைனாமடுவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலைக்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய இருக்கும் நிலையில் அதன் பின்னணியில் சீனா உள்ளதாக  சந்தேகங்கள் வலுக்கிறது.

ஆனால் அந்தத் திட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலையில்  அதன் பின்னணியில் சீனா அரசாங்கமோ அல்லது சீன முதலீட்டாளர்கள் என்ற  வலுவான சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் தாய்லாந்தை  தலைமையமாகக் கருதப்படும் நிறுவனம் சர்க்கரை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாம் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் அமைத்துள்ளது.


No comments