முன்னணியில் இருவர் அடுத்தடுத்து கைது!



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் உட்பட இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு தாளையடி பொதுளையாட்டரங்கில் கடந்த 03 ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில், காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து சற்குணதேவி ஜெகதீஸ்வரன் இன்று காலை செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த கிளிநொச்சி மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான மருதங்கேணி காவல்நிலைய அதிகாரிகள் உட்பட்ட 10க்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் சற்குணதேவி ஜெகதீஸ்வரனிற்கு பிணை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்திடம் கோரிநின்றனர்.

அக்கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

இதனிடையே முன்னணியின் மற்றொரு உறுப்பினரான உதயசிவம், முல்லைத்தீவில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை கோயில் வளாகத்தில் வைத்து, காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை ஆலயத்தில், நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வேளையில், ஆலய வளாகத்தில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


No comments