டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்க்கிக் கப்பல் மாயம்!
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிட மக்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.
நீர்மூழ்க்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி சரியாக 45 நிமிடங்களில் காணாமல் போயுள்ளது. அதில் நீர்மூழ்க்கிக் கப்பல் ஓட்டி மற்றும் நான்கு உல்லாசப் பயணிகள் இருந்துள்ளனர்.
நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பொஸ்டன் கோஸ்ட்கார்ட் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் அவசரநிலை ஏற்பட்டால் நீர்மூழ்க்கிக் கப்பலில் 96 மணிநேரம் சுவாசிப்பதற்கான ஓக்சிஜன் இருப்பு உள்ளது.
எப்போதாவது பணம் செலுத்தும் சுற்றுலாப் பயணிகளையும் நிபுணர்களையும் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களில் அழைத்துச் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைவைப் காண்பிப்பார்கள். நிறுவனம் எட்டு நாள் பயணத்தில் பிரபலமான சிதைவைப் பார்க்க விருந்தினர்களிடம் $250,000 (£195,270) வசூலிக்கிறது. கடல் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 3,800 மீற்றரில் (12,500 அடி) டைட்டானிக் கப்பலை சிதைவுகள் காணப்படுகின்றன.
ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனமான OceanGate Expeditions, காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைச் சொந்தமாக வைத்திருப்பதாகவும், அதில் மக்கள் இருந்ததாகவும் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
Post a Comment