சுமாவும் கண்டித்தார்!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் என நிர்பந்தித்தமை சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்யும் நடவடிக்கை நாடாளுமன்ற சிறப்பரிமையை மீறுகிற செயல் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் நாடாளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற வேளையில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையிலான கைது சட்டவிரோதமானதும் அடக்குமுறையின் வெளிப்பாடு என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியறுத்தியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி காவல்; நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி அணிந்து கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்று ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 இன்று (07)  பிற்பகல் நாடாமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சமயமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments