ரணில் ராஜபக்ச:இனி தடைகளே இல்லை!மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஸ, சி.பி ரத்நாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான முறைப்பாட்டினை ஜுலை மாதம் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

No comments