அனைவருக்கும் விடுதலை!
காலை கொழும்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணை வழங்கியுள்ளது.
மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை நாடாளுமன்ற உறுப்பினர் அவரது வீட்டினில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டிருந்தது.
மருதங்கேணி காவல்; நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு பயணத்தடையை விதிக்குமாறு காவல்துறை கோரியிருந்தது.
அதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு கட்சி ஆதரவாளர்;களும் இன்று(07) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான செல்வராஜா உதயசிவம், சற்குணதேவி ஜெகதீஸ்வரன் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment