ரஷ்யாவை விட்டு பெலாரஸுக்கு செல்கிறார் பிரிகோஜின்


பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வாக்னர் கூலிப்படை என்று அழைக்கப்படும் துணை இராணுவக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது பிரிகோஜின் தனது படைகளை மொஸ்கோவை நோக்கி செல்வதை நிறுத்தி நிலைமையை குறைக்க தனது படைகளை முகாங்களுக்குத் திரும்பிச் செல்ல ஒப்புக்கொண்டார் என்று பெலாரஷின் அரச ஊடகமான ரோசியா 24 செய்தி சேவை தெரிவித்துள்ளது.

வாக்னர் தனது போராளிகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் ரஷ்யர்கள் இரத்தம் சிந்துவதை தவிர்க்க இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. புட்டினுடன் உரையாடல் ஒப்புக் கொள்ளப்பட்டதாக ரோசியா 24 கூறினார்.

பிரிகோஜின் ரஷ்ய நாட்டை விட்டு வெறியேறி பெலாரஷ் செல்லவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோவை நோக்கி துருப்புக்கள் நகர்வதை நிறுத்த வாக்னர் தலைவர் ஒப்புக்கொண்டதாக பெலாரஸ் கூறுகிறது.

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்தார். தற்போது வாக்னர் படைகள் செய்த கிளர்ச்சிக்காக தேசத் துரோகம் போன்ற எந்த தண்டனையையும் சந்திக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்னர் குழு போராளிகள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானை விட்டு வெளியேறி தங்கள் கள முகாம்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர் என்று பிராந்திய ஆளுநர் கூறினார்.

டாங்கிகள், டிரக்குகள் மற்றும் வாக்னர் படைகளைச் ஏற்றிச் செல்லும் பல சிற்றூர்த்திகள் நகரத்தை விட்டு வெளியேறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவத் தலைமைக்கு எதிராக பிரிகோஜின் தலைமை தாங்கிய ஆயுத கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவர மின்ஸ்கின் தரகு ஒப்பந்தத்தின் கீழ் வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸுக்குச் செல்வார் என்று கிரெம்ளின் சனிக்கிழமை கூறியது.

பெலாரஷ்யன் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புடினின் ஆதரவுடன் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார். ஏனெனில் அவர் பிரிகோஜினை சுமார் 20 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் நண்பராக அறிந்திருந்தார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

இரத்தம் சிந்துதல், உள்ளக மோதல்கள் மற்றும் கணிக்க முடியாத முடிவுகளுடன் மோதல்களைத் தவிர்ப்பது மிக உயர்ந்த குறிக்கோள் என்று பெஸ்கோவ் கூறினார்.

சனிக்கிழமை தொடங்கப்பட்ட ப்ரிகோஜினுக்கு எதிரான குற்றவியல் வழக்கு கைவிடப்படும் மற்றும் பிற வாக்னர் படையினர் கிளர்ச்சிக்கான தண்டனையை எதிர்கொள்ளாது பெஸ்கோவ் மேலும் கூறினார்.

இந்த ஆயுதக் கிளர்ச்சி உக்ரைனில் நடைபெறும் சிறப்பு இராணுவத்தின் தாக்குதல் திட்டங்களை பாதிக்காது என்று அவர் மேலும் கூறினார். 

No comments