4,000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தைக் கண்டுபிடிப்பு


அகழிகள் மற்றும் புதைகுழிகளால் ஆன 4,000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை நெதர்லாந்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹேக்கில் இருந்து 72 கிலோமீட்டர் (44.7 மைல்) தொலைவில் உள்ள டைல் என்ற இடத்தில் இந்த தளம் தோண்டப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள கல் வட்டம் போன்று சூரியனுடன் இணைவதற்காக கட்டப்பட்டது.

புதைகுழியில் சுமார் 60 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எச்சங்கள் இருந்தன. 

ஏறக்குறைய 800 ஆண்டுகளாக இந்த இடம் பலியிடும் திருவிழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.

இந்த தளம் 2017 இல் தோண்டப்பட்டது, ஆனால் அதன் முக்கியத்துவம் இப்போதுதான் தெளிவாகியுள்ளது.

1,000 ஆண்டுகள் பழமையான கண்ணாடி மணிகள் உட்பட சுமார் 1 மில்லியன் பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துக்கு முன்னரான 2,500 பழமையான கலைப்பொருட்களும் எடுக்கப்பட்டுள்ளன.

4,000 ஆண்டுகள் எப்படி இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை ஒரு எடுத்துக்காட்டு படம்

No comments