கடும் வெம்பம்: இந்தியாவில் 170 வரையில் உயிரிழப்பு


கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் அண்மைய நாட்களில் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு மாநிலங்களில் கிட்டத்தட்ட 170 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்

வட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த சில நாட்களில் வெப்பம் தொடர்பான நோய்களால் 119 பேர் இறந்துள்ளனர், அண்டை மாநிலமான பீகார் மாநிலத்தில் 47 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் செய்தி அறிக்கைகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் அதிக நோயாளிகளுக்கு சிகிற்சை அளிக்க இடமளிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வெப்பம் காரணமாக 54 பேர் இறந்ததை அடுத்து அதன் பிணவறை இறந்த உடல்களை வைக்க இடம் இல்லாது உள்ளது. சில குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்தியாவின் வடக்குப் பகுதிகள் கோடை மாதங்களில் கொளுத்தும் வெப்பத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், வெப்பநிலை தொடர்ந்து இயல்பை விட அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறிவருகிறது. 

அண்மைய  நாட்களில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் (110 டிகிரி பாரன்ஹீட்) இருந்தது. வெப்பநிலை இயல்பை விட குறைந்தபட்சம் 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் அல்லது வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருந்தால் இந்தியாவில் வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது.

No comments