திருநெல்வேலியில் வாளுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் மூன்றடி நீளமான வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments