பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியது அரசாங்கம்


பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் அறிவித்துள்ளார்.

1969 ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த 9 ஆம் திகதி முதல் 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments