கலாசாலை நூற்றாண்டையொட்டி கல்லூரிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள்


கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டையொட்டி கலாசாலைக்கும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கும் இடையிலான சிநேகபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய் கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இரு கல்லூரிகளதும் உடலாளர் மன்ற ஏற்பாட்டில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு. பரமானந்தம் ஆசிரிய கலாசாலை அதிபர் ச. லலீசன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கல்வி வலயப் பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். 

சிறப்பு விருந்தினர்களாக  கலாநிதி செல்வி நி. நல்லையா கலாநிதி திருமதி ஜெ. தியாகலிங்கம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக லயன் டாக்டர் வை. தியாகராஜா மற்றும் எங்கட புத்தகங்கள் புகழ் கு. வசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments