இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு


கொஸ்கொட, ஹித்தருவ பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 6 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 52 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, கொட்டாவ தர்மபால கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 

டி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments