யாழில். மத நல்லிணக்கத்திற்கான நடைபவனி

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுத்தது. 

அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக சென்ற நடைபவனி மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது.

இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச. செந்தூராசா  மற்றும் நான்கு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதகுருமார் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments