நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!
நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதால் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
மாங்காடு கட்டுப்பிள்ளையார் வீதியைச் சேர்ந்த தில்லையம்பலம் யூசைமலர் (வயது 54) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் நச்சுத் தன்மை கொண்ட மீனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புஜேந்தினி (வயது 27), அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், சகோதரன் கிறிஸ்ரின் (வயது 20) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புஜேந்தினி உயிரிழந்ததுடன் அவரது தாயார் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 
 
 
 
 
Post a Comment