கொசோவாவில் மோதல்: நேட்டோப் படையினர் மீது சேர்பியர்கள் தாக்குதல்: பலர் காயம்!


கொசோவாவில் உள்ள சேர்பிய சிறுபான்மையினர் சேர்பிய பெரும்பான்மையாக வசிக்கும் சிவேகன் பகுதிகளில் அல்பேனிய இன மேயர்கள் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேர்பிய சமூகங்கள் நகராட்சித் தேர்தலை புறக்கணித்ததால் அல்பேசிய மேயர்கள் பதவியேற்றனர். இதனால் அங்க போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலைியல் கொசோவாவில் அமைதிகாக்கச் சென்ற நேட்டோப் படைகளுக்கும் (KFOR) சேர்ப்பியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பல நேட்டோப் படையினர் காயமடைந்தனர்.

கொசோவாவில் சேர்பியர்கள் பெருண்பாண்மையாக வாழும் சிவேகன் (Zvecan) நகராட்சி சபையின் கட்டிடத்தின் முன்  கொசோவோ காவல்துறையினருடன் செர்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர்.

அதன்பின்னர் சட்டத்தை அமலாக்க ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது காவல்துறையனிர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மிளகுத் திரவம் தெளித்தனர்.

நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் படையினர் முதலில் எதிர்ப்பாளர்களை காவல்துறையினரிடமிருந்து பிரிக்க முயன்றனர். அதன் பின்னர் ஆனால் பின்னர் கேடயங்கள் மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்கத் தொடங்கினர்.

பல எதிர்ப்பாளர்கள் நேட்டோப் படையினர் மீது கற்கல், போத்தல்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசி மூலம் பதிலளித்தனர்.

இந்த மோதலில் நேட்டோப் படையினர் பலர் காயமடைந்தனர். பெற்றோல் வீசியதால் நேட்டோ படையினருக்கு எலுக்கு முறிவுகள் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

நேட்டோப் படையினர் அங்கம் வகிக்கும் 11 படையினர் காயமடைந்தனர். அதில் 3 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஹங்கேரியின் படையினர் தரப்பில் 20 மேற்பட்டோர் காயமடைந்தனர். 7 பேர் தீவிர சிகிற்சையில் உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 52 செர்பியர்கள் காயமடைந்தனர்.  ஒருவர் அல்பேனிய நேட்டோ படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினார்.

செர்பியாவில் இருந்து கொசோவோவின் சுதந்திரத்தை நிராகரிக்கும் பல இன செர்பியர்களின் தாயகமான வடக்கு கொசோவோ நகரங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தியதாக கொசோவோ காவல்துறை கூறியது.

கொசோவோ 2008 இல் செர்பியாவிலிருந்து ஒருதலைப்பட்சமாக சுதந்திரத்தை அறிவித்தது. மேலும் பெல்கிரேடும் அதன் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும் அதை அங்கீகரிக்க மறுத்துவிட்டன. கொசோவோ ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெறுவதை திறம்பட தடுத்தது.

கொசோவோவில் உள்ள செர்பியர்கள் பெல்கிரேடிற்கு விசுவாசமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில், அவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் மற்றும் பிராந்தியத்தின் மீது அதன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிரிஸ்டினாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிராகரிக்கின்றனர்.


No comments