மேற்கு ஊடகங்களில் பொய்களுக்கு முற்றப்புள்ளி வைத்தார் லுகாஷென்கோ


பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நோய்வாய்பட்டுவிட்டதாகவும் அவர் பொது வெளியில் அவரைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை என்று மேற்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில் அப்பொய்களை உடைத்தெறியும் வகையில் அவர் இன்று படைத் தளபதிகளைச் சந்தித்துள்ளார். அதற்கான காணொளி மற்றும் புகைப்படங்களை பெலாரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிகை அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே 9 நாள் ரஷ்யாவில் நடைபெற்ற நாசிப் படைகளை வென்றதை நினைவு கூரும் அணிநடை நிகழ்வில் கலந்த அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு ரஷ்யா நஞ்சூட்டியதாகவும் அதனால் அவர் படுத்தபடுக்கையில் என பல செய்திகள் வெளியாகின. அவர் கலந்துகொள்ளவிருந்து பொது நிகழ்விலும் அவர் பங்கெடுக்கவில்லை இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக யூகங்கள் பல எழுந்துள்ளன. 

இந்நிலையில் லுகாஷென்கோ தனது நாட்டின் வான் பாதுகாப்பு மையக் கட்டளைப் பதவிக்கு பயணம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் ஸ்டேட் டுமாவில் உள்ள சிஐஎஸ் நாடுகளின் குழுவின் முதல் துணைத் தலைவர் கான்ஸ்டான்டின் ஜாதுலின், திரு லுகாஷென்கோ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் அவர் பார்வையிட்ட புகைப்படங்களையும் , காணொளியையும் பார்வையிட்ட பின்னர் அவரின் குரல் தளம்பல் இருக்கிறது. கையில் பத்து போட்டுள்ளது என மேற்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

No comments