உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணையை வழங்குவதை உறுதி செய்தது பிரித்தானியா
ரஷ்யப் படைகளுக்கு எதிரான போராட்டத்திற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதை பிரித்தானியா உறுதிப்படுத்தியுள்ளது.
சடோ குறூஸ் (Shadow cruise) ஏவுகணை மூலம் 250 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதற்கு நேர்மாறாக, உக்ரைன் பயன்படுத்தும் அமெரிக்காவினால் வழங்கப்படும் ஹிமார்ஸ் ஏவுகணைகள் சுமார் 80 கிமீ (50 மைல்கள்) தூரம் மட்டுமே செல்லக்கூடியவை.
இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு தன்னை தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.
Post a Comment