ஜேவிபியும் கஞ்சி வரிசையில்!முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(11.05.2023) யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு அருகில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருத்தித்துறை வீதியால் தனது நண்பருடன் சென்ற மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி)  உறுப்பினர் ஒருவரும்  சிரட்டையில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கிப் பருகியுள்ளார்.

இதேவேளை, கட்சி வேறுபாடுகளின்றிப் பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வாங்கிப் பருகியமையை அவதானிக்க முடிந்தது.  

No comments