மண்ணெய், ஜீபிஎஸ் அனைத்தும் பிச்சை

 


ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது குறிப்பாக சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், அதன் பராமரிப்பு தொடர்பான சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.

சீன படகொன்று மூழ்கடிக்கப்பட்ட பின்னணியில் இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது. 

அத்துடன் மீன்பிடிப்படகுகளைப் பயன்படுத்தி கடலில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.


No comments