நினைவுகூரத்தடை?

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட சம்பவங்களை நினைவுகூருவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்தத் தடை உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த தடையுத்தரவின் படி ஆர்ப்பாட்டகாரார்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் இல்லம், நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 2022 மே 9 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நாட்டில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments