இணைந்து பயணிக்க முடிவு!



இலங்கை அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பேச்சு சுதந்திரத்தினை இல்லாமல் செய்யும் என மட்டக்களப்பு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் வடகிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களிற்;கு ஆதரவு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் தரப்பில் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு இணைந்ததாக நீண்டகாலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் செயற்பட்டுவருகின்றது

எனினும்  கடந்த சில மாதங்களாக வடகிழக்கில் ஒவ்வொரு மாவட்ட மட்டத்திலும் செயற்பாடுகள் தனித்தனித்தே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் எதிர்காலத்தில் வினைத்திறனுடன் வடகிழக்கின் அனைத்து மட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழும்பங்களது போராட்டங்களை ஒருங்கிணைத்து கொண்டுசெல்வது குறித்தும் மட்டக்களப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.


No comments