சீ.வீ.கேயும் விருப்பத்தை வெளியிட்டார்!

அனைவரும் ஏக மனதாக என்னை தெரிவு செய்தால் தமிழரசுகட்சியின் தலைமையினை   ஏற்க தயார் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்,

இலங்கை இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையினை ஏற்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர.

இந்நிலையில் தமிழரசு கட்சியின் மூத்த துணை தலைவர் சிவஞானமும் தனது தலைமைத்துவ விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

என்னை பொறுத்தவரை நான் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏக மனதாக தெரிவு செய்வார்களாக  இருந்தால் போட்டியில்லாது அனைவரதும்  ஒத்துழைப்போடு இணக்கப்பாட்டோடும்  தெரிவு செய்தால் அதைநான்  ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில்  உள்ளேன் 

 ஒரு மனதாக முரண்பாடு  இல்லாமல்  தெரிவு செய்யப்பட்டால் நான் அந்த கடமையினை செய்யக்கூடிய ஆற்றல் பொறுப்புஎனக்குள்ளது அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்து  பதவிக்கு வர விரும்பவில்லை 


தலைமைக்கு தகுதியுடையவர்  என என்னை பலர் கேட்கின்றார்கள் சொல்லுகின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாக போக வேண்டும் ஒருமனதாக போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ள்ளது அவ்வாறு இணக்கப்பாடு வந்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments