மகிழுந்து ஓட்டப் பந்தையத்தில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!


மெக்சிக்கோவின் வடக்கு நகரமான என்செனாடாவில் அமெச்சூர் மகழுந்து ஒட்டும் பந்தையப் போட்டியில் துப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

மகிழுந்து ஓடும் பந்தயத்தில் பங்கேற்ற ஓட்டுநர்கள் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​ஒரு குழு டிரக்கில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. என்செனாடா அமைந்துள்ள பாஜா கலிபோர்னியாவில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று கூறியது.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, என்செனாடா நகராட்சியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்செனாடா நகரம் 440,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது மற்றும் இது அமெரிக்க எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

No comments