திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து 2 பில்லியன் !



உயர்கல்விக்காக வெளிநாடு சென்று திரும்பிவராத விரிவுரையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபாய் அறவிட வேண்டும் என்பது தெரியவந்தது. இத்தொகையை உரிய உத்தரவாதம் வழங்கியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குழு (கோப்),குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு வெளிநாடு சென்ற 617 ஆசிரியர்களில் 84 பேரே இதுவரை உரிய கொடுப்பனவுகளை செய்துள்ளதாக தெரியவந்தது. அதன்படி, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது.

 பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான  பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.

இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

No comments