வேல்ஸில் அமைதியின்மை: மகிழுந்துகளுக்கு தீ வைப்பு!


பிரித்தானியாகின் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸில் உந்துருளி விபத்து ஒன்றில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பொிய அளவிலான பதற்றங்களும் மோதல்களும் நடந்தன.

வேல்ஸ் கார்டிஃப் பகுதியில் உள்ள எலி (Ely) மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு உந்துருளி (ஸ்கூட்டர்) விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

பல இளைஞர்கள் முகமூடிகள் அணிந்தபடி மகிழுந்துகளுக்கு தீ வைத்தனர். கலகத் தடுப்புக் காவல்துறையினரை நோக்கி கற்களையும் வானவேடிக்கைக்கான பட்டாசு வெடிகளையும் வீசினர். இதில் பல காவல்துறையினர் காயமடைந்தனர்.

செவ்வாய்கிழமை அதிகாலை எலி காவல் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற ஆலோசனைக்கு பின்னர் குதிரையில் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.

சில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் துரத்துகின்றனர் என்ற வதந்தியே குறித்த இரு இளைஞர்களின் மரணத்திற்கு காரணம் என்று குடியிருப்பாளர்கள் சந்தேகத்தமையே அமையின்மைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


No comments