யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு - குற்ற செயல்களுக்காக திருடப்படுகிறதா ?


யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

வீடுகளுக்கு முன்பாக , கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு , ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் , மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமலும், மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்களை அவதானித்து , அந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.

திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் அன்றைய தினம் மாலை அல்லது மறுநாள் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் கைவிடப்பட்ட நிலைகளில் பொலிசாரினால் மீட்கப்படுகின்றன. 

எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வோர் அதனை பூட்டி பாதுகாப்பாக நிறுத்தி செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

அத்துடன் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா ? இத்தகைய மோட்டார் சைக்கிள் திருட்டில் கும்பலாக ஈடுபடுகின்றனரா ? அல்லது ஓரிருவர் மாத்திரம் ஈடுபடுகின்றனரா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments