தையிட்டி விகாரைக்கு அருகில் கைதான ஐவருக்கும் பிணை
தையிட்டி விகாரைக்கு அருகில் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம் நேற்றைய தினம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவரை பலாலி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து அவர்கள் ஐவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
Post a Comment