களுத்துறை சிறுமி உயிரிழப்பு - பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 29 வயதுடைய நபர் 16 வயது சிறுமி , பெண்ணொருவர் மற்றும் ஆணொருவர் என நால்வர் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் மாலை ஹோட்டலின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயது சிறுமியின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில். ஹோட்டலுக்கு வந்த நால்வரும், இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்த போதிலும், நான்கு பேரும் ஒரே அறையில் மது அருந்துவதை ஹோட்டலின் ஊழியர் ஒருவர் அவதானித்ததாக பொலிஸாருக்கு தெரிவித்தார்.
பின்னர், ஒரு ஆணும் , பெண்ணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதை அடுத்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றைய நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் அவதானித்துளனர்.
இந்நிலையில் ஹோட்டலுக்கு உணவு கொண்டு வந்த நபர் ஒருவர் , ஹோட்டலின் பின் புறமான புகையிரத பாதைக்கு அருகில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக ஹோட்டல் ஊழியர்களுக்கு அறிவித்ததை அடுத்து , ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உயிரிழந்த, சிறுமியுடன் சென்ற 19 வயது பெண் மற்றும் 22, 29 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment