யாழில். 2 வயது குழந்தை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு


யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. 

இளவாலை பகுதியை சேர்ந்த கருணாநிதி ரக்ஸியா (வயது 2) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

தந்தை வேலைக்கு சென்று இருந்த சமயம் , தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். குழந்தை கிணற்றுக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவேளை கிணற்றினுள் தவறி விழுந்துள்ளது. 

குழந்தையை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த போது , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 


No comments