ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சந்திப்பு!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கும், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வது தொடர்பிலும், கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments