யாழ்.பண்ணை பொலிஸ் சாவடி மீது கல் வீச்சு - ஒருவர் கைது


யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்ணை பகுதியில் பொலிஸாரின் சோதனை சாவடியில் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு நபர் ஒருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, கண்ணாடிகளை உடைத்துள்ளார். 

அதனை அடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , தான் மது போதையிலையே கல் வீசினேன் என தெரிவித்துள்ளார். அந்நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments