பிரித்தானியாவில் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் 35ம் ஆண்டு நினைவும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் பிளம்ஸ்டட் பகுதியில் இன்றய தினம் முன்னெடுக்கப்பட்டது 

நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி ரஞ்சிதமலர் அவர்கள் ஏற்றிவைத்ததினை தொடர்ந்து, முதலாவது மாவீரர் லெப் சங்கர் அவர்களின் தந்தையார்  அவர்கள்  ஈகை  சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தினை தொடர்ந்து அன்னை பூவதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களான மனோகரன், மற்றும் விஜயகுமார் அவர்களுக்குமான மலர் வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் திருமதி சாமினி கண்ணன் அவர்களின் மாணவி செல்வி ஜவிஷா தயாபரன் அவர்களின் நடனமும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயட்பாட்டாளர் திரு கதிர் அவர்களின் கவிதையும், பவித்திரன் ரஞ்சிதா அவர்களுடைய கவிதையும் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சமகால அரசிய நிலவரம்  பற்றியும் பிரித்தானிய பிரதமர் இல்லம் முன்பாக நடை பெற இருக்கும் மே18 ற்கான முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான தமிழ் மக்களின் பிரமாண்ட அணி திரள்வின் அரசியல் முக்கியம் பற்றியதுமான

 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்களின் உரை இடம்பெற்றது.

உறுதியுரையுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது.

No comments