மரண தண்டனையை இரத்து செய்ய மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்


மலேசியாவில் சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்ட சீர்திருத்தங்களுக்கு மலேசியாவின் கீழ்சபை (திவான் ராக்யாட்) திங்களன்று ஒப்புதல் அளித்தது.

இந்தச் சட்டம் இப்போது நாட்டின் மேலவைக்கும் (திவான் நெகாரா) பின்னர் அரசரிடம் கையெழுத்திடவும் அனுப்பப்படும்.

திங்களன்று நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின் கீழ், மரண தண்டனைக்கு மாற்றாக சவுக்கால் அடித்தல் மற்றும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை ஆகியவை அடங்கும். புதிய சிறைத்தண்டனையானது, குற்றவாளியின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனைக்கு வழிவகுத்துள்ளது.

மலேசியாவில் ஆயுள் தண்டனை 30 ஆண்டுகள் என நிலையான காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளது.

No comments