67 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு


தலைமன்னார் கடற்பரப்பில் 67 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமன்னார், வெலிப்பாறையை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மிதந்து வந்த ஒரு பையை சோதனையிட்டதில், நான்கு பார்சல்களில் அடைக்கப்பட்ட 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடத்தல்காரர்கள் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு தமது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

No comments