பிரித்தானியாவில் நடைபெற்ற நடுகல் நாயகர்களின் வணக்க நிகழ்வு

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று லண்டன்

வடமேற்க்கு பிராந்தியத்தினில் தமிழார் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய செயற்பாட்டாளர் திரு சின்னராசா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய செயற்பாட்டாளர் திரு செல்வன் ஏற்றிவைத்தார்.நிகழ்விற்கான ஈகை சுடரினை  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய மகளிர் பொறுப்பாளர் திருமதி வசந்தி சிவசூரியன்  ஏற்றிவைத்தார். திரு உருவத்திற்கான மலர்மலையினை பிரியத்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  துணை பொறுப்பாளர் ச.நிமலன் அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து மலர்வணக்கம் சுடர்வணக்கம் இடம் பெற்றது. கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

No comments