வளரும் பகை: பழிக்குப் பழி: தூதுவர்கள் வெளியேற்றிய ரஷ்யா


ரஷ்யாவில் இருந்து 20 யேர்மனி தூதர்களை வெளியேற்றம் செய்து, அறிவித்ததுடன், நட்புறவை பெர்லின் அழித்து விட்டது என ரஷிய குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த போரால் உலக நாடுகளில் அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகின்றன. இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார தடை உள்ளிட்டவற்றை அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டன. ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டில் இருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றின.

எனினும், போரானது முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்களை வெளியேற்றி, ரஷ்யாவுக்கு அந்நாட்டு அரசு அதிர்ச்சி கொடுத்தது. ரஷ்யாவும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதுபற்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட யேர்மனி நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் போர் சூழலில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளி அணி திரண்டன. அதில், யேர்மனியும் கைகோர்த்து கொண்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்க கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் யேர்மனியும் கலந்து கொண்டது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷ்யாவின் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில், யேர்மனியில் இருந்து ரஷ்ய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷ்யாவும் ஈடுபட்டு வருகிறது. 

இதன்படி, கடந்த 5 ஆம் திகதி , ரஷ்யாவில் உள்ள யேர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம், அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது. இதன்படி, ரஷ்யாவில் உள்ள யேர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி கூறியுள்ளது. ஒட்டுமொத்த ரஷ்ய-யேர்மனி உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகிறது என மாஸ்கோ குற்றச்சாட்டு தெரிவித்தது. 

யேர்மனியின் பகைமை நடவடிக்கைகளை தொடர்ந்து, அதற்கு அதன் முடிவையே பிரதிபலிக்க செய்யும் வகையில், ரஷ்யாவில் இருந்து யேர்மனி தூதர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என யேளர்மனியின் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்து உள்ளது.


No comments