யப்பானால் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் விபத்துக்குள்ளானது
நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்த விண்கலம் விழுந்து நொருக்கியிருக்கலாம் என ஜப்பானிய நிறுவனமான ஐஸ்பேஸ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாயன்று சுமார் 16:50 GMT மணிக்கு ஐஸ்பேஸ் நிலவுக்கு அனுப்பப்ட்ட லூனர் லேண்டருடனான தொடர்பை இழந்தது. அது வெற்றிகரமான தரையிறக்கத்தை அடையமுடியவில்லை.
தகவல் தொடர்பை இழந்ததால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை என ஐஸ்பேஸ் கருதுகிறது.
அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களை மெதுவாக தரையிறக்க முடிந்தது.
இந்தியா மற்றும் இஸ்ரேலிய நிறுவனமான SpaceIL இன் சமீபத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை நினைவூட்டத்தக்கது.
Post a Comment