செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு


யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு கம்பி என்பன திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

தந்தை செல்வா சதுக்கத்தில் சில  வருடங்களுக்குள் வெவ்வேறு கால பகுதியில் மூன்று மோட்டர்கள் திருடப்பட்டுள்ளன 

அவை ஒவ்வொன்றின் பெறுமதியும் சுமார் 75 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது இடிதாங்கி மற்றும் அதனுடன் இணைந்த செப்பு கம்பி என்பன திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments