எக்னெலிகொட மனைவி கோத்தாவை விட்டபாடாகவில்லை!
ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட அவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள உருண்டோடி விட்டது
இந்த நிலையில் எக்னெலிகொட அவர்களின் மனைவி சந்தியா எக்னெலிகொட அக்கரைப்பற்று வீரமாகாளி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தனது கணவரை கொன்றவர்களுக்கு காளி அம்மன் தான் தண்டனை வழங்க வேண்டும் கதறி இருக்கின்றார்
சில மாதங்களுக்கு முன்னரும் கடத்தப்பட்ட தனது கணவனுக்காக கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில சைவ ஆகம முறைப்படி முடி இறக்கி வேண்டுதலில் ஈடுப்பட்டு இருந்தார்
கோட்டாபய ராஜபக்ச தரப்பில் கடத்தப்பட்ட எக்னெலிகொட அவர்கள் தெற்கில் கிரிதலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வெலிகந்த மன்னம்பிட்டி இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது
கொல்லப்பட்டபின்னர் சேருநுவர இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த பிள்ளையானிடம் ஒப்படைக்கப்பட்ட அவரின் சடலம் அப்பகுதியில் உள்ள சகதியில் புதைக்கப்பட்டு பின்னர் திருகோணமலை கடலில் வீசப்பட்டப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்து இருந்தது
எக்னெலிகொடவின் கடத்திய ராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் கேணல் அதிகாரிக்கு அத்துருகிரிய பிரதேசத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி கொண்ட வீடு , நீச்சல் தடாகம், பூந்தோட்டம் என்பன உள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது
இது தொடடர்பாக நல்லாட்சியின் போது 9 இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போதும் தற்போது விசாரணைகள் கைவிடப்பட்டு இருக்கின்றன
Post a Comment