சூடானில் உக்கிர சண்டை: 56 பொதுமக்கள் பலி!


சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தலைநகர் காட்டூமில் வெடித்த மோதலில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் கார்ட்டூமில் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்டி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கு துணை இராணுவக்குழு முயற்சித்ததால் கடும் மோதல்கள் இடம்பெற்றன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையினல் குடியிருப்பாளர்கள் பலர் இறந்துள்ளனர்.

சிவிலியன் ஆட்சிக்கு முன்மொழியப்பட்ட மாற்றம் குறித்த பதட்டங்களுக்குப் பிறகு மோதல்கள் வெடித்தன.

துணை இராணுவமான விரைவு ஆதரவுப் படைகள் (RSF), கார்ட்டூமில் உள்ள விமான நிலையம் மற்றும் பிற முக்கிய தளங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.

நேற்று தொடர்ந்த மோதல்கள் இரவு இரவாகத் தொடர்ந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கார்ட்டூமை ஒட்டிய ஓம்டுர்மன் மற்றும் அருகிலுள்ள பஹ்ரியில் கனரக பீரங்கிகளின் சத்தம் கேட்டன. போர்ட் சூடானின் செங்கடல் நகரத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் துணை இராணுவப் படைகளின் தளங்கள் மீது சூடானிய விமானப்படை தாக்குதல்களை நடத்தியதாக இராணுவம் கூறியது.

நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடந்த மோதலில் குறைந்தது 56 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் குறைந்தது 595 பேர் காயமடைந்துள்ளனர்.

டஜன் கணக்கான இராணுவ வீரர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக சூடான் மருத்துவர்கள் குழு கூறியது.

நாட்டின் மேற்கில் உள்ள கப்காபியாவில் உள்ள இராணுவ தளத்தில் துணை இராணுவப் படைககள் மற்றும் ஆயுதப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உணவு உதவி வழங்கும் ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்தின்  (WFP) மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.No comments